வணக்கம் மாணவர்களே,
C language ஐ சிறப்பாக தேர்ச்சிபெற சிறந்த வழி அதை கற்றுக்கொள்வது தான். மனப்பாடம் செய்தால் சிறந்த மதிப்பெண் வாங்க வாய்ப்பு உள்ளது, ஆனால் நேர்காணலில் அது கைகொடுக்காது.
வாருங்கள் C programming ஐ சிறப்பாக கற்கலாம். இதில் உள்ள முக்கியமான அனைத்து பாடங்களையும் நான் தமிழில் விலக்கிக்கூறியுள்ளேன்.
C programming இன் பயன்பாடுகள் :
-கேம்ஸ்
-கிரப்பிகள் உசெர் இன்டர்பேஸ்
-அட்வான்ஸ் காம்புடேசன்
-வெப் பிரோசர்
-டேட்டாபேஸ்
-ஆபரேட்டிங் சிஸ்டம்
-மெடிகல் அண்ட் என்ஜினீயரிங் அப்பிளிகேசன்
C language ஐ 2021 - இல் கற்றுக்கொள்வது பயனுள்ளதா?
C language மிக பழமையானது. இருப்பினும் அதை அதிக இடத்தில் நாம் பயன்படுத்துகிரோம். இது ஒரு அடிப்படை பாடம் ஆகும் . அதனால் இதை கற்பதால் மற்ற programming languages ஐ எளிதில் கற்காலம்
C language ஏன் பிரபலம் ?
இது programming languages கு தாய் என்றே கூறலாம். இதற்கு மெமரி மேனேஜ்மென்ட் திறன் அதிகம். இதை ஆபரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்துவர்.ஆதலால் இதற்கு செல்வாக்கு அதிகம்
C language-ஐ கற்றுக்கொள்வது கடினமாக இருக்குமா?
இதை கற்றுக்கொள்வது அவளவு கடினம் அல்ல. இது IT ஃபீல்டிற்கு தேவைப்படும் அதியவசிய திறமை ஆகும். இது மெசின் லெவல் language கு நிகராகும், அதனால் இதை கற்றுக்கொள்வதனால் , கம்பியூட்டர் ஓஎஸ் எவ்வாறு இயங்கும் என்பதை அறியலாம்.
"C” மொழி டென்னிஸ் ரிச்சி (Dennis Ritche) என்பவரால் 1972-ஆம் ஆண்டு அவர் வேலை செய்த “Bell laboratories” என்ற கம்பெனியின் உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டது. இன்று கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், மின்னணு கருவிகள் என்று எங்கும் “C” மொழியின் பயன்பாடு பரவியுள்ளது. “C” மொழி கற்றுக் கொள்வது மிகவும் சுலபம். ஆனால் “C” மொழியில் புரோக்ராம் எழுதுவதற்கு அதிக பயிற்சி தேவை. “C” மொழி, புரோக்ராம் எழுதுபவரை புத்திசாலியாக நினைப்பதால் மிகவும் கவனத்துடன் புரோக்ராம் எழுத வேண்டும்.
“C” மொழியில் எழுதுகிற புரோக்ராம்கள் அதிவேகத்துடன் செயல்படுவதால் இன்று மின்னணுவியலில் “C” மொழியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எந்த மின்னணு கம்பெனியிலும் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு சென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி “C புரோக்ராமிங் தெரியுமா?” என்பதே. நமக்கு ஆங்கிலமோ அல்லது ஹிந்தியோ தெரியவில்லை என்றாலும் “C” மொழி புரோக்ராமிங் தெரிந்திருந்தால் வேலை கிடைப்பது சுலபம்.
ஒவ்வொரு மின்னணுவியல் மாணவருக்கும் “C” மொழியில் புரோக்ராமிங் எழுத கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இது ஒரு திறன். காசு கொடுத்து வாங்க முடியாது. கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் முதலே பயிற்சி மேற்க்கொள்ள வேண்டும்.
மாணவர் கவனத்திற்கு ,
நாங்கள் பள்ளிகூடமோ அல்லது கல்லூரியோ அல்ல. நான் கற்றதை உங்களுக்கு உடிமி மூலம் பகிர்ந்துள்ளேன்